67 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு!
67 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது
2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறிய 67 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
உத்தரகாண்ட் ஐகோர்ட்டு உத்தரவுப்படி 63 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய தொலைத்தொடர்புத்துறை கேட்டுக் கொண்டதாகவும் மேலும் 4 இணையதளங்களை முடக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
அந்த இணையதளங்களில் ஆபாச தகவல்கள் வெளியாகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 67 ஆபாச இணையதளங்களில் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பதாகவும் இது சட்டத்துக்கு எதிரானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
Edited by Siva