1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 16 ஜூலை 2018 (15:13 IST)

ரத்த வெள்ளத்தில் முதலை பண்ணை? நடந்தது என்ன?

இந்தோனேஷியாவில் உள்ள முதலை பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்டு வந்த 300 முதலைகளை அப்பகுதி மக்கள் பழி வாங்கும் நோக்கத்தோடு வெட்டிகொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தோனேசியாவில் பப்புவா மாநிலத்தில், சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை உள்ளது. இது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே அமைந்திருந்ததால் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இவ்வாறு இருக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த பகுதியை சேர்ந்த 48 வயதான நபரை முதலைகள் கொன்றது. இதனால், ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் அந்த நபரின் இறுதிச்சடங்கு நடந்து முடிந்ததும், ஆயுதங்களுடன் புறப்பட்ட முதலைப் பண்ணைக்குள் புகுந்தனர்.
 
அங்கிருந்த 300க்கும் மேற்பட்ட முதலைகளை வெட்டி சாய்த்தனர். இது குறித்து பண்ணை நிர்வாகத்தினர் சார்பில் போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டு, அந்த பகுதி மக்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.