1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 ஜூலை 2018 (15:08 IST)

18 மாதங்களுக்கு முன் கடலில் மாயமான பெண் உயிருடன் மீட்பு!

இந்தோனேசியாவின் சுகாபூமி தீவை சேர்ந்த பெண் சுனாரிஷ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிட்டேபஸ் கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த போது ராட்சத அலை ஒன்று அவரை கடலுக்குள் இழுத்துச்சென்றது. 
 
அப்போது இவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. பல நாட்கள் தேடியும் இவர் கிடைக்காத காரணத்தால் இவர் இறந்துவிட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில், இந்த பெண் 18 மாதங்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 
 
அதாவது, அவருடைய தந்தை கனவில் தோன்றிய சுனாரிஷ் நான் உயிரோடு இருக்கிறேன். கடலில் மூழ்கிய பகுதி அருகே தான் உள்ளேன். என்னை மீட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். 
 
முதலில் இதை கண்டுக்கொள்ளாமல் விட்ட இவரது தந்தை இதே போன்று கனவு மீண்டும் மீண்டும் வரவும், குறிப்பிட்ட இடத்திற்கு போய் தேடியுள்ளார். அப்போது அந்த பெண் முன்னர் அவர் கடலில் மூழ்கிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் உயிர் பிழைத்து கொண்டார். 
 
ஆனால், 18 மாதங்களுக்கு முன்பு கடலில் மூழ்கியவர் எப்படி உயிரோடு வந்தார்? என்பது மர்மமாகவே இருக்கிறது.