செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (08:56 IST)

சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பரவியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1600 ஐ தாண்டியுள்ளது. தமிழகத்திலேயே அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டம் சென்னைதான். இதனால் சென்னை மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இதுவரை சென்னையில் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் பலியாகி, 103 பேர் குணமாகியுள்ளனர். சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் நேற்று முன்தினம் வரை, மணலி மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் மட்டும் தொற்று இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இப்போது அம்பத்தூர் மற்றும் மணலி ஆகிய இடங்களிலும் தலா ஒரு பாதிப்புக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலவாரியாக பாதிப்பு
 
  • ராயபுரம் 117 பேர்
  • தண்டையார்ப்பேட்டை - 46 பேர்
  • திருவிக நகர் - 45 பேர்,
  • தேனாம்பேட்டை - 44 பேர், 
  • கோடம்பாக்கதம் - 36 பேர், 
  • அண்ணாநகர் - 32 பேர்.
  • திருவொற்றியூர் - 13 பேர்,
  • வளசரவாக்கம் - 10 பேர்,
  • பெருங்குடி - 8 பேர்,
  • ஆலந்தூர் மற்றும் அடையார்-  தலா 7 பேர்,  
  • மாதவரம் - 3 பேர் 
  • சோழிங்கநல்லூர் - 2 பேர்
  • அம்பத்தூர் - 1 நபர்,
  • மணலி - 1 நபர்