1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (21:33 IST)

இரவிலும் சூரியன் உதிக்குமாம்: எங்கு தெரியுமா??

பெரும்பாலும் சூரியன் பகலிலும், நிலவு இரவிலும் வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், உலகில் உள்ள சில நாடுகளில் 24 மணி நேரமும் சூரியன் மறையாமல் இருக்குமாம். 


 
 
நார்வே: 
 
ஆர்டிக் பகுதியில் நார்வே அமைந்துள்ளது. இந்த நாட்டில் நடு இரவில் சூரியன் உதிக்குமாம். இதை காணவே சுற்றுலாப்பயணிகள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனார்.
 
ஃபின்லாந்த்:
 
ஃபின்லாந்த் நாட்டில் கோடைக்கால ஆரம்பத்தில் சூரியன் உதிக்கும். ஆனால், அதன் பின்னர் 73 நாட்கள் கழித்தே சூரியன் மறையும்.
 
அலஸ்கா:
 
அலஸ்கா நாட்டில் மே முதல் ஜூலை வரை சுமார் 1440 மணி நேரம் பகலாகதான் இருக்குமாம்.
 
ஐஸ்லாந்த்: 
 
ஐஸ்லாந்த் நாட்டில் மே முதல் ஜூலை வரை சூரியன் மறையாமல் இருக்குமாம். கோடைக்காலங்களில் நடு இரவில் சூரியன் மறைந்து மீண்டும் அதிகாலை 3 மணிக்கே உதித்துவிடுமாம்.
 
கனடா:
 
கடனா நாட்டில் அதிக அளவில் ஐஸ் கட்டிகள் உறைந்திருக்கும். இங்கு சுமார் 50 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்குமாம்.
 
ஸ்வீடன்:
 
ஸ்வீடனில் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சூரியன் நடு இரவில் மறைந்து அதிகாலை 4.30-க்கு உதிக்குமாம்.