திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (13:42 IST)

குட்டைப்பாவடையில் வந்தால் மது இலவசம்; சர்ச்சையை ஏற்படுத்திய இரவு விடுதி

பிரான்ஸ் நாட்டில் குட்டைப்பாவடை அணிந்து வரும் பெண்களுக்கு மது இலவசமாக வழங்கப்படும் என பிரபல இரவு விடுதி அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஜெயண்ட் லாரண்ட் டு வார் என்ற பகுதியில் பிரபல தனியார் இரவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு பெண்களை அதிகளவில் வரவைக்க சர்ச்சை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த விடுதி. 
 
வாரந்தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் போது 25 செ.மீ நீளத்தில் குட்டைப்பாவடை அணிந்து வரும் பெண்களுக்கு விடுதியில் அனுமதி இலவசம். 18-23 செ.மீ நீளத்தில் குட்டைப்பாவடை அணிந்து வரும் பெண்களுக்கு முதல் முறை மது இலவசமாக வழங்கப்படும். 18 செ.மீ அளவுக்கு குறைவாக குட்டைப்பாவடை அணிந்து வரும் பெண்களுக்கு ஒயின் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
 
விடுதியின் இந்த அறிவிப்பு பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெண்கள் அமைப்பினர் சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.