செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (16:58 IST)

பாகிஸ்தானில் ஆஸி வீரர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு… இணையத்தில் பரவும் ட்ரோல்கள்!

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி இப்போது அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி  கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. கடைசியாக 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் அங்கு செல்லும் ஆஸி அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் நடந்த  முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்நிலையில் இப்போது ஆஸி கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களில் ஒருவரான மார்னஸ் லபுஷான் பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்று பல கிரிக்கெட் ரசிகர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சிக்கும் படி அமைந்துள்ளது. லபுஷான் அந்த டிவீட்டில் ‘தாலும் ரொட்டியும் மதிய உணவாக… அருமை’ எனப் பகிர்ந்து இருந்தார். அந்த டிவீட்டுக்குக் கீழ் கமண்ட் செய்யும் ரசிகர்கள் ‘சிறைவாசிகளுக்குக் கூட இதைவிட நல்ல உணவுக் கிடைக்கும். பாகிஸ்தானுக்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு இப்படிதான் உணவளிப்பீர்களா’ எனக் கோபமாக வினா எழுப்பி வருகின்றனர்.