12 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டதா கொரோனா? அதிர்ச்சி தகவல்
12 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டதா கொரோனா?
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆக்கிரமித்து வரும் நிலையில் இந்த வைரஸ் குறித்து 12 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான 'என்ட் ஆஃப் டேஸ்' என்ற புத்தகத்தில் 2020ம் ஆண்டு மிகவும் மோசமான வைரஸ் ஒன்று உலகம் முழுவதும் பாதிக்கும் என்றும் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் குழாய்களைத் இந்த வைரஸ் தாக்கும் என்றும் உலகின் தலைசிறந்த மருத்துவர்களால் கூட இதை கட்டுபடுத்த முடியாது மட்டுமின்றி இதற்கு மருந்து கண்டுபிடிக்கவும் முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் என குறிப்பிட்டு இந்த வரிகள் இல்லை என்றாலும் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் குறித்துதான் கடந்த 2008ம் ஆண்டு வெளியான இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'என்ட் ஆஃப் டேஸ்' என்ற இந்த புத்தகத்தை சில்வியா பிரவுன் என்பவர் எழுதியுள்ளார். இந்த புத்தகம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது