வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (07:20 IST)

கலிபோர்னியாவில் முதல் மரணம்: ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸ்

கலிபோர்னியாவில் முதல் மரணம்
சீனாவில் உள்ள வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனா முழுவதிலும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகவே மூவாயிரம் பேர் பலியாகியுள்ளதாகவும், கொரோனா  வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி வருகிறது குறிப்பாக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா வைரஸ் காரணமாக முதல் நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 53 பேர் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கலிபோர்னியா நிர்வாகம் அறிவித்துள்ளது
 
இதனை அடுத்து கலிபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முழு அளவில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதி காரணமாக அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை அலுவலகம் வரவேண்டாம் என்றும், வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது