ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 4வது அலையா?
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரனோ வைரஸ் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் பரவி கோடிக் கணக்கானவர்களை பாதிப்பு ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே
தற்போது உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கையில் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஜெர்மனி இத்தாலி ஆகிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பிரிட்டனில் கடந்த 7 நாட்களில் சுமார் 6 லட்சம் பேருக்கும் ஜெர்மனியில் ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு கொரனோ உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இதனால் கொரோனா வைரஸ் நான்காவது அலை பரவி விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது