புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 30 மார்ச் 2022 (12:54 IST)

முன்னனி யுடியூப் சேனல் முடக்கம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரபலம்!

முன்னனி யுடியூப் சேனல் முடக்கம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
தமிழில் குறிப்பிடத்தகுந்த யுடியூப் உணவு விமர்சன சேனலாக இருந்து வருகிறது இர்பான் வியூ என்ற சேனல்.

யுடியூபில் எப்போதுமே ஃபுட் ரிவ்யூ சேனல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும். அதுபோல தமிழக இளைஞர்களிடம் பிரபலமாக இருந்து வருபவர் இர்பான். இவரின் இர்பான் வியூ சேனல் மூலமாக பல உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு ரிவ்யூ வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவரின் சேனல் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘என் சேனல் முடக்கப்பட்டதாக மெயில் வந்துள்ளது. ஆனால் ஏன் என்று விவரம் தெரிவிக்கப்படவில்லை. யுட்யூப் நிர்வாகத்துக்கு முறையிட்டுள்ளேன். விரைவில் சேனல் மீட்கப்படும் ‘ எனக் கூறியுள்ளார்.