வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (14:01 IST)

இனிமேல் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெளியாகாது: அதிரடி அறிவிப்பு!

corona
இனிமேல் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெளியாகாது என சீன அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சீனாவி கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது என்றும் தினசரி கோடிக்கணக்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி எண்ணிக்கையை இனி வெளியிடப் போவதில்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. டிசம்பர் ஒன்று முதல் டிசம்பர் 20 வரை சீனாவில் சுமார் 25 கோடி பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சீன அரசு நடத்திய ஆய்வில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த முடிவை சீன அரசு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva