ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (19:58 IST)

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேருக்கு கொரோனா : அதிகாரிகள் தகவல் !

பீகார் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  பலர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பீகார்  மாநிலத்தில் மொத்தமுள்ள 60 கொரோனா நோயாளிகளில் பெரும்பாலானோர் அம்மாநில சிவான் மாவட்டத்தில் உள்ள ஒரே குடும்பத்தில் பதிவாகியுள்ளது.

மேலும், கடந்த மாதம் ஓமனில் இருந்து திரும்பிய ஒருவரிடம் இருந்து தான் இந்தத் தொற்று எல்லோருக்கும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

குடும்பத்தில் உள்ள பாதிக்கப்பட்ட  உறுப்பினர்களின் எண்ணிக்கை 22  பேர் ஆகும். மொத்தமுள்ள 23 பேரில் தற்போது 4 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் குடும்பத்தில் இன்னும் 10 பேரின் சோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்துக்க்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.