கம்பியூட்டரை தாக்கும் கொரோனா வைரஸ்...
சீனாவில் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதல், பல நாடுகளைத் தாண்டி இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவன் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 258 பேர் இறந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இருந்து 324 பேர் ஏர் இந்திய விமானம் மூலம் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஹரியாணா மாநிலம், மானேசரில் தனி மருத்துவ முகாமை ராணுவம் அமைத்துள்ளனது.
ஏற்கனவே கேரளாவில் 806 பேருக்கு கொரனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் தென்படுவதால் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல கம்பூட்டர்களையும் தாக்கும் என பொறியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கஸ் பெர்ஸ்கை ஆண்டிவைரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எஞினியர்கள் கம்யூட்டர்களில் உள்ள பைல்களில் கொரோனா வைரஸை கண்டுபிடித்து உள்ளனர். இந்த வைரஸ் பிடிஎஃப், மற்றும் டாக்மென்ட் பைல்களை தாக்கி உள்ளதையும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கொரோனா வைரஸ் போலியான பைல்களில் இருந்து மறைந்து பரவும் என தெரிவித்துள்ளனர்.