திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (22:27 IST)

12 ஆண்டுகளில் ஒரே ஒரு சூப்பர் ஓவர் வெற்றி தான்: நியூசிலாந்தின் பரிதாபம்!

இந்திய அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி இதற்கு முன்னர் 12 ஆண்டுகளில் ஒரே ஒரு சூப்பர் ஓவரில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
ஏற்கனவே மூன்றாவது டி20 போட்டி மற்றும் உலக கோப்பை போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
நியூசிலாந்து அணியின் சூப்பர் ஓவர் தோல்விகள்:
 
டி-20 - எதிர்- வெஸ்ட் இண்டீஸ், ஆக்லாந்து, 2008 (தோல்வி)
டி-20 - எதிர்- இலங்கை, பல்லேகலே, 2012 (தோல்வி)
டி-20 - எதிர்- வெஸ்ட் இண்டீஸ், பல்லேகலே, 2012 (தோல்வி)
ஒருநாள் - எதிர்- இங்கிலாந்து, லார்ட்ஸ், 2019 (தோல்வி)
டி-20 - எதிர்- இங்கிலாந்து, ஆக்லாந்து, 2019 (தோல்வி)
டி-20 - எதிர்- இந்தியா, ஹாமில்டன், 2020 (தோல்வி)
டி-20 - எதிர்- இந்தியா, வெலிங்டன், 2020 (தோல்வி)
 
கடந்த 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு நடைபெற்ற டி20 போட்டியில் மட்டுமே கடந்த 12 ஆண்டுகளில் நியூசிலாந்து அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது