அச்சுறுத்தும் கொரோனா; ஒரே நாளில் 200 பேர் பலி..

Corona virus 242 dead in one day
Arun Prasath| Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (09:36 IST)
கோப்புப்படம்

சீனாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் மட்டும் 242 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.

கொரோனா வைரஸ், சீனாவை தொடர்ந்து கிட்டதட்ட 25 க்கும் அதிகாமான நாடுகளில் பரவியுள்ளது. இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவில் முதல்முதலாக வைரஸ் பரவிய ஹூபெய் மாகாணத்தில் தற்போதைய நிலவரப்படி ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. இதன் படி கொரோனா வைரஸால் இது வரை பலியானோரின் எண்ணிக்கை 1357 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :