கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு; இந்திய தூதரகம் உறுதி

Two Indians in Japan ship affected by corona virus
Arun Prasath| Last Updated: புதன், 12 பிப்ரவரி 2020 (20:42 IST)
கோப்புப்படம்

ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸ் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் தேதி ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு புறப்பட்டது.

இக்கப்பல் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பிய போது, அக்கப்பலில் பயணித்த 80 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் ஜப்பான் துறைமுகத்தில் அனுமதிக்க மறுத்தனர். இதனை தொடர்ந்து அக்கப்பலில் 135 பேருக்கு வைரஸ் தொற்று இருந்ததாக அறியப்பட்டது.

இந்நிலையில் அக்கப்பலில் உள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானின் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :