செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (08:16 IST)

கொரோனாவால் ஒரே வாரத்தில் 50 ஆயிரம் பேர் சாகலாம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனாவால் ஒரே வாரத்தில் 50 ஆயிரம் பேர் சாகலாம்
கடந்த சில மாதங்களில் உலக அளவில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர்
 
இந்த நிலையில் அடுத்த ஒரே வாரத்தில் கொரோனா வைரசால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் கேப்ரிசியஸ் என்பவர் அச்சம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 10 லட்சத்தை நெருங்கி வருகிறது. இத்தாலியில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மட்டுமன்றி ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் கொரோனாவால் இதுவரை நிகழ்ந்த உயிரிழப்புகள் ஒன்றுமே இல்லை என்றும் அடுத்த ஒரு வாரத்தில் பல மடங்கு கூடுதல் உயிரிழப்பு ஏற்படும் என்றும் சர்வதேச சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பெற்ற டெட்ராஸ் கேப்ரிசியஸ் என்பவர் கூறும்போது ’சமூக அரசியல் பொருளாதார ரீதியாக கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், உலக அளவில் கொரோனா வைரஸால் அடுத்த ஒரே வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கருத்தால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன,