தொடர்புடைய செய்திகள்
- கொரோனா தடுப்பு நடவடிக்கை ...நடிகர் விஜய் வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள்
- தமிழகத்திற்கு 500 வெண்ட்டிலேட்டர்களை தந்த பிரபல ஐடி நிறுவனம்
- குறிப்பிட்ட மதத்தை டார்கெட் செய்வதா? குஷ்பூ காட்டம்!!
- கொரோனா தொற்றுடன் மருத்துவம் பார்த்தாரா தூத்துகுடி மருத்துவர்? அதிர்ச்சி தகவல்
- ரூ.100 கோடி கொடுங்க.. பாஜகவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பிய திமுக!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு !
கொரோனாவை தடுக்க இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மக்கள் வீட்டில் இருக்காமல் வீட்டை வெளியே வந்துகொண்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க போலீஸார் ரோந்து வருகின்றனர்.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்விஹி மாநாட்டில் கலந்து கொண்டோருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அபாயம் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த மாநாட்டில் பல்லாயிரக்கானவர்கள் பங்கேற்றனர். அதில், தமிழகத்தில் இருந்து 190 பேர் பங்கேற்றுள்ளனர். துரதிஷ்டவசமாக அவர்கள் அத்துனை பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் மொத்தம் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், 1,103 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
