கரன்சியில் பரவும் கொரோனா? பகீர் ஆய்வு முடிவுகள்!!
கொரோனாவும் கரன்சி மூலம் பரவக்கூடும் என்பதால் உலக சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. தென்கொரியா, ஈரான், இத்தாலி என பல நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தற்போது இந்தியாவிலும் பலரிடம் கண்டறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரன்சி நோட்டுகள் மூலமாகவும் வைரஸ் பரவும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் பல்டானா பகுதியில் சேகரிக்கப்பட்ட கரன்சி நோட்டுகளை ஆய்வு செய்ததில் சில நோய் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே கொரோனாவும் கரன்சி மூலம் பரவக்கூடும் என்பதால் உலக சுகாதார அமைப்பும், முடிந்த வரை பரிமாற்ற வகையில் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.