1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (10:44 IST)

சென்னை சிறுவனுக்கு கொரோனா பாதிப்பா? அமைச்சர் விஜயபாஸ்கர் டுவீட்

சென்னை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
நேற்று அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் குறித்த அறிகுறி இருந்ததால் அந்த சிறுவன் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்ள தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது ரத்த மாதிரி சோதனை எடுக்கப்பட்டு புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது புனேவில் இருந்து வெளிவந்த அறிக்கையின்படி சென்னை சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது. இதனை அடுத்து அவர் இன்னும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிகிறது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் 
 
மேலும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவரின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக அவர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவருக்கும் கொரோனா  பாதிப்பு இல்லை என்பது தற்போது உறுதியாகி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.