வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (18:35 IST)

வேட்டைக்காரனுடன் சேர்ந்து நரமாமிசம் சமைத்த சிறுமி கைது...

ரஷ்யாவில்  வசிக்கும் பெற்றோர் தங்கள் பெண்ணை  கானவில்லை என அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அந்த சிறுமி காணாமல் போகும் முன்பு தன் முக நூல் பக்கத்தில் 'நான் ஒரு வேட்டைக்காரனை விரும்புவதாகவும், வேறு யாரும் எனக்கு வேண்டாம்' என்று அதில் பதிவிட்டிருந்தார்.
 
அதை அடிப்படையாககக்கொண்டு போலீஸார் துப்பு துளங்கிய போது, அந்த சிறுமி குடியிருக்கும் கோச்சி பகுதியில் இருந்து  1500 மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் காணாமல் போன சிறுமி 22 வயது இளைஞருடன் தங்கியிருப்பதாக தகவல் வந்தது.
 
அந்த வீட்டை போலீஸார் நெருங்கிய போது வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. வீட்டுக்குள் நுழைந்து போலீஸார் சோதனை செய்த போது மனித மூளை சமைக்கப்பட்ட நிலையிலும், உடலின் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி எடுக்கப்பட்டு இருப்பதையும் கண்டு திகைப்படைந்துள்ளனர்.
 
பின் சிறுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அலெக்ஸாண்டர் என்ற 21 வயது இளைஞரை கோடாரியால் வெட்டி  கொலை செய்து சமைக்க இருந்ததாகவும் அதற்கு அவருடைய வேட்டைகார காதலன் உதவியதாகவும் கூறியுள்ளார். மேலும் இதற்கு சிறுமியை அந்த வேட்டைக்கரன் கடத்திவந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமிக்கு 12 வயதே ஆவதினால் அநேகமாக அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.