செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 அக்டோபர் 2018 (18:42 IST)

பெண்ணுக்கு ஈவ்டீசிங்...திருந்தாத வாலிபர்கள்...?

வட மாநிலமான உத்திரபிரதேசத்தில் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த 12ஆம் வகுப்பு மாணவிகளை வாலிபர்கள் இரண்டு பேர் நிறுத்தி வைத்து ஈவ்டீசிங்  செய்துள்ளனர்.
அப்போது அவ்வழியே வந்த வேறொரு வாலிபர் ஈவ்டீசிங் செய்த வாலிபர்களை தட்டிக் கேட்டுள்ளார்.
 
ஆனால் தடுக்க வந்த வாலிபரையும் ஈவ்டீசிங் செய்தவர்கள் அடித்து விரட்டியுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவியரின்  பெற்றோர்கள்  இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. எனவே காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
 
எத்தனை சட்டங்கள் போட்டு காவல்துறையினர் எச்சரித்தாலும் பெண்களிடம் தப்பாக நடக்க முயற்சிப்பதும், ஈவ்டீசிங்செய்வதும் நாட்டில் குறைவதில்லை என்றுதான் தற்போதைய நிலவரங்கள் மூலம் தெரியவருகின்றன.