1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (18:51 IST)

சிரியாவில் தொடரும் தாக்குதல் சம்பவம் ! பொதுமக்கள் 9 பேர் பலி

சிரியாவில் அரசுப் படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் சிரியா அதிபர் அல் அசாத்துக்கு ரஷ்யா உதவிவருவதாகத் தகவல் வெளியான நிலையில், இங்குள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் சண்டையிட்டு வருகிறது.
இந்நிலையில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளா மக்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகிறது.
 
மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாரட் அல் நுமன் நகரில் நடைபெற்ற தாக்குதலில் மக்கள் பலர் படுகாயமடைந்தனர். அதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், உன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் சிரியாவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.