முதுகின் பின்னால் வரைவதை உணரும் போட்டி...வைரல் வீடியோ

tik tok
sinoj| Last Modified புதன், 20 மே 2020 (20:55 IST)

சீனாவில் இருந்து உலகம் முழுவதும்
பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு வரும் மே 17 ஆம் தேதி வரை
அமல்படுத்தப்பட்டது.
அதன் பிறகு 4ஆம் கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், இந்தக் கொரோன காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டி, தினமும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

உலக அளவிலும் பல்ச்வேறு நாடுகளில் கொரோனா காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வருகிறது.
.
இந்நிலையில், டிக் டாக் செயலியில் ஒரு விளையாட்டு வேகமாகப் பரவி வருகிறது. அதாவது ஒருவரின் முதுகின் பின்னர் ஒருவர் நின்று கொண்டு ஒரு பேப்பரை ஒட்டி அதில் படம் வரைவார்கள். அதை உணர்ந்து கொண்டு அதே மாதிரி முன்னால் இருப்பவர் அதை வரைய வேண்டும்.

இந்த விளையாட்டில் என்ன வரைகிறார்கள் என்பதை உணர்ந்து மிகச் சரியாக வரைந்து விடுபவர்களும் உண்டு. சிலர் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அலங்கோலமாக வரைந்து விடுவதும் உண்டு. ஒருவருடைய படைப்புத் திறனை அறிய இது பயன்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :