1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

கொழும்பு பங்குச்சந்தை திடீர் நிறுத்திவைப்பு: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

cse
கொழும்பு பங்குச்சந்தை திடீர் நிறுத்திவைப்பு: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் கொழும்பு பங்குச்சந்தை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இலங்கையில் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அடுத்த 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது 
 
பொருளாதார நிலைமைகள் குறித்து கேள்வி மற்றும் புரிதலைப் பெற உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச்சந்தை விளக்கமளித்துள்ளது
 
 கொழும்பு பங்குச்சந்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்