1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By திருமலை சோமு பெய்ஜிங்
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2020 (17:27 IST)

சர்வதேச ஒழுங்கைப் பாதுகாக்க உதவும் சி.ஐ.சி.ஏ

21 ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கான நூற்றாண்டு என்பதை கருத்தில் கொண்டே ஆசிய நாடுகள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

ஆசிய நூற்றாண்டில் உலகம் முன்னேறும்போது,  ஆசிய கண்டத்தின் நாடுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தங்கள் திறனைப் பயன்படுத்திக்கொள்ள பல முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிகபட்ச நன்மைகளைப் பெற, முதலீட்டிற்கு உகந்த சூழல் ஒரு முன்நிபந்தனையாக உள்ளது. இத்தகைய சூழலுக்கு உத்தரவாதம் அளிக்க, பங்கேற்கும் நாடுகளிடையே பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை மேம்படுத்துவதற்காக 1992 ஆம் ஆண்டில் ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான மாநாடு (சிஐசிஏ) உருவாக்கப்பட்டது.

தற்போது இது ஒரு பரந்த தளமாக உருவெடுத்துள்ளது, இது ஒரு பரந்த பிரதிநிதித்துவத்தின் மூலம் பிராந்திய ஸ்திரத்தன்மையையும் செழிப்பையும் ஊக்குவிக்கிறது. 

பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் முந்தைய நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைதூக்கியது. இதனால் ஆசிய நாடுகளின் வளர்ச்சி 21 ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து சீர்குலைந்தது. இந்த சிக்கலை கூட்டு முயற்சியின் மூலம் மட்டுமே சமாளிக்க முடியும் என்பதை சர்வதேச சமூகம் உணர கொஞ்ச காலம் எடுத்தது.

உறுப்பினர்களிடையே தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறையை ஏற்படுத்தியதன் மூலம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் சிஐசிஏ தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. ஆசியாவில் பாதுகாப்பு நிலைமை சீராக முன்னேறியதுடன் கிழக்கு அரைக்கோளத்தில் பொருளாதார நிலைமைகளும் அதிகரித்தன.

உலகம் இப்போது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல், ஒருதலைப் பட்சமான வளர்ச்சியாகும். பெரும்பாலும் இந்த போக்கு ஆசிய எல்லைகளுக்கு வெளியில்தான் இருக்கிறது என்றாலும், இது ஆசிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பையும் பாதிக்கிறது. எனவே ஐ.நா.வின் ஒருங்கிணைந்த பலதரப்பு அமைப்பு ஆதரிக்கப்பட வேண்டும் என்று சி.ஐ.சி.ஏ உறுப்பினர்கள் ஒருமனதாக கருதுகின்றனர்.

இரண்டாம் உலகப்போருக்கு பின் உருவாக்கப்பட்ட ஐ.நா. நாடுகளுக்கு இடையிலான யுத்தம் மற்றும் ஆயுதப் பிரயோகங்களை தடுப்பதோடு வறுமை, கல்வியறிவின்மை, நோய் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களையும் கூட்டாக எதிர்கொள்ள உதவுகிறது.

சர்வதேச உறவுகளின் அமைப்பு ஜனநாயகமயமாக்கப்பட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் சிறப்பாக தீர்க்கப்படக்கூடும். பலவீனமான நாடுகளின் குரலும் பொது சபையில் ஒலிக்கும் அவர்களின் நலன்கள் சக்திவாய்ந்த நாடுகளால் கெடாமல் பாதுகாக்கப்படும். பிராந்திய மற்றும் துணை பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவித்து பலதரப்பு ஒற்றுமையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்.. இதற்காக சிஐசிஏ எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் உலகலாவிய அரங்கை காட்டுச் சட்டம் போல் மாறாமல் பாதுகாக்கின்றன. ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு நியாயமான அமைப்பாக அவை சர்வதேச ஒழுங்கைப் பாதுகாக்க உதவுகின்றன.

ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான மாநாடு செப்டம்பர் 24 அன்று ஒரு மெய்நிகர் (ஆன்லைன்) கூட்டத்தை நடத்தியது. இதில் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அமைப்பின் உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்கான தனது பார்வையை சீனா முன்வைத்தது.

பரஸ்பர மரியாதை, நேர்மை மற்றும் நீதி ஆகியவை மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்கால சமூகத்தை உருவாக்குவதற்கான தூண்களாகும்.ஆசியாவில் மட்டுமல்ல, உலகிலும் பெருமளவில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் பங்களிப்புகளை வழங்குவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உறுதியளித்தார். COVID-19 நோய் பரவலை கட்டுப்படுத்திய அனுபவங்களை சீனா பகிர்ந்து கொண்டதைப் போலவே, வளர்ச்சி வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்ள சீனா தயாராக உள்ளது. சீனாவில் ஒரு பெரிய உள்நாட்டு சந்தை ஆசிய முதலீட்டாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. எனவே உறுப்பு நாடுகள் அதன் பன்முகத் தன்மை மீது நம்பிக்கையை வைத்திருக்க வேண்டும் மற்றும் சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புவாத போக்குகளை ஊக்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

-