1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. World corona status is 3.27 crores

உலக நிலவரம்: 3 கோடியை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!

அமெரிக்கா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.27 கோடியைத் தாண்டியுள்ளது. அதேபோல உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2.40 கோடியைக் கடந்துள்ளது.
 
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 63 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.92 லட்சத்தைக் கடந்துள்ளது.  
 
மேலும், கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்முன் உலகளவில் வைரஸ் தொற்றால் இருபது லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார நிறுவனம்  எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
காவிரி ஆற்றில் இறங்கிய தம்பதிகள்… செய்த செயலால் பக்தர்கள் அதிர்ச்சி!