தேவையில்லாம எங்க ஏரியாக்குள்ள வந்து போறீங்க! – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!
அமெரிக்கா – சீனா இடையே கடந்த சில காலமாகவே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் சீனாவின் தைவான் ஜலசந்தி வழியாக அமெரிக்க போர் கப்பல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா – சீனா இடையே கொரோனாவிற்கு முன்பிருந்தே வர்த்தக ரீதியான மோதல் இருந்து வந்த நிலையில் , சீனாவால்தான் உலகம் முழுவதும் கொரோனா பரவியது என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட எல்லை நாடுகள் மீது சீனா அத்துமீறுவதை கண்டித்து வரும் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை சீன பசிபிக் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தியுள்ளது அச்சுறுத்தலாக சீனாவால் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச எல்லையை தாண்டி தைவான் ஜலசந்தி வழியாக அமெரிக்க போர் கப்பல் பயணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தொடர்ந்து அத்துமீறிய அச்சுறுத்தல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அமெரிக்காவோ தைவான் ஜலசந்தியில் பயணித்தது ஒரு சுதந்திரமான செயல்பாடு என கூறியுள்ளது.