செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (08:45 IST)

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... பிரச்சாரத்தில் ட்ரம்ப் டான்ஸ் மூவ்ஸ்!!

நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட ட்ரம்ப் தனது ஆதரவாலர்களை ஈர்த்து வருகிறார். 
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பையும் மீறி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடனும் மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ட்ரம்பும் பரபரப்பாக தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த ட்ரம்ப் மீண்டும் தனது பிரச்சார பணிகளை துவங்கியுள்ளார். இந்நிலையில் ஒஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்வாண்டான் என்ற இடத்தில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் வாக்கு சேகரிப்பை நடத்தி வந்தார். 
 
அப்போது பாடல் ஒன்று இசைக்கப்பட்டதும் கையை தட்டிக்கொண்டு சில மெல்லிய நடன அசைவுகளை தனது ஆதரவாளர்களுக்காக போட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்ததோடு இந்த வீடியோ வைரலாகியும் வருகிறது.