திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj

கண்களைக் கட்டி......உயிரைப் பணயம் வைத்து கின்னஸ் சாதனை.... சிலிர்க்கச் செய்யும் வீடியோ

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற தாகம் இருக்கும். அந்த வகையில்  தெலுங்கானாவில் வசிக்கும் பிரபாகர் ரெட்டி  தனது  மாணவர் ராஜேஷ் என்பவருடன் இணைந்து  கின்னஸ் சாதனைப் புத்தக்கத்தில் இடம் பிடித்துள்ளார்.

இதில், இருவரில் ஒருவர் தரையில் படுத்துக்கொள்ள இன்னொருவர் சுத்தியலைக் கொண்டு அவரைச் சுற்றிலும்  பரப்பி வைக்கப்பட்டுள்ள தேங்காய்களை உடைக்க வேண்டும். அதிலும் வெறும் 35 நிமிடத்தில் இந்தத் தேங்காய்களை உடைக்க வேண்டும் என்ற விதி கொடுக்கப்பட்டது. அதம்படி 1 நிமிடத்தில் 49 காய்களை உடைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தனர். இதற்காக இவர்கள் 6 மாத காலம் பயிற்சி எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்தச் சாதனையைச் செய இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 
https://www.facebook.com/watch/?ref=external&v=1064997237304394

https://www.facebook.com/watch/?v=1064997237304394