1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. China under heavy rain fall after 1000 years

ஆயிரம் வருடத்தில் காணாத அடைமழை! – ஒரே நாளில் சீனாவை உலுக்கிய வெள்ளம்!

World
சீனாவில் ஆயிரம் வருடங்களில் இல்லாத அளவு கனமழை ஒரே நாளில் பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜெங்சோ மற்றும் ஹெனான் உள்ளிட்ட பகுதிகளில் அதீத கனமழை பெய்துள்ளதால் ஊரே வெள்ளக்காடாகியுள்ளது. ஜெங்சோ பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக 200 மில்லி மீட்டர் மழை பெய்ததால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பெரும் வெள்ளத்தில் சாலைகளில் நின்றிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த அதீத கனமழை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர சுமார் 2 லட்சம் மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த ஆயிரம் வருடத்தில் மிகப்பெரும் மழைப்பொழிவாக இது உள்ளதாக கூறப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஒலியை விட இருமடங்கு வேகம்; ரஷ்யாவின் புதிய போர் விமானம்!