மக்கள் தொகைய மொத்தமா குறைச்சிட்டோம்! – சீனா அறிவிப்பு!
உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ள சீனா தனது மக்கள் தொகையை வெகுவாக குறைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் சீனா தனது மக்கள் தொகையை குறைக்க கடந்த சில ஆண்டுகளாகவே கடும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வந்தது. தம்பதியர் ஒரு குழந்தைக்கும் மேல் பெற்றுக் கொண்டால் சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகளும் அளிக்கப்பட்டன. பின்னர் எதிர்காலத்தில் இளைஞர்கள் எண்ணிக்கை குறையும் என்பதை கணக்கில் கொண்டு குழந்தைகள் ஒன்றுக்கு மேல் பெற்றுக் கொள்ள அனுமதித்தது.
இந்நிலையில் சீனா கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக தனது நாட்டு மக்கள் தொகை குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் மக்கள் தொகை 8.50 லட்சம் குறைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதில் கொரோனா பலிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Edit By Prasanth.K