வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2019 (19:03 IST)

சீனாவை புரட்டி போட்ட சூறாவளி.. 13 பேர் பலி

சீனாவின் செஜியாங் மாகாணத்தில் சூறாவளி தாக்கியதில் 13 பேர் பலியாகியுள்ளனர்

சுமார் நள்ளிரவு 1.45 மணியளவில் சீனா நாட்டில் செஜியாங் மாகாணத்தில் லெகிமா என்ற சூறாவளி புயல் தாக்கியது. மணிக்கு 187 கி.மீ வேகத்தில் வீசிய இந்த சூறைகாற்றால், மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இதனால் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சூறாவளியில் சிக்கி 13 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூறாவளியானது செஜியாங், ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் எனவும், ஷாண்டாங் தீபகற்பகத்தின் கடற்கரை பகுதிகளில் நாளை மாலை கரையை கடக்கலாம் எனவும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மீட்பு குழுவைச் சேர்ந்த 1000 வீரர்களும் 150 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சூறாவளியால் பலத்த மழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.