திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (10:42 IST)

ஒரு வருஷம் பழசான நூடுல்ஸ்; வேணாம்னு சொன்ன குழந்தைகள்! – சீனாவில் சோகம்!

சீனாவில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பழைய நூடுல்ஸை சாப்பிட்ட குடும்பம் உடல்நல கோளாறால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடகிழக்கு பிராந்தியமான ஹீலாங்ஜியோங் பகுதியில் உள்ள ஒரு குடும்பம் சோள மாவில் வீட்டிலேயே செய்த நூடுல்ஸை கடந்த ஒரு வருட காலமாக ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாத்துள்ளனர். சமீபத்தில் அந்த நூடுல்ஸை எடுத்து சமைத்து குடும்பமே சாப்பிட்டுள்ளது. சாப்பிட்ட சில மணி நேரத்தில் அனைவருக்கும் வயிற்று வலி ஏற்பட உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அனுமதித்த சில மணி நேரங்களுக்குள்ளாக அனைவரும் இறந்துள்ளனர். அந்த குடும்பத்தில் நூடுல்ஸ் பிடிக்காது என சாப்பிட மறுத்த மூன்று குழந்தைகள் மட்டும் உயிர் பிழைத்துள்ளனர். இதுகுறித்து உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் சோள மாவால் செய்யப்பட்ட நூடுல்ஸ் நீண்ட காலம் கழித்து உண்ணப்பட்டதால் அதில் ஏற்பட்டிருந்த ரசாயன மாற்றம் உடலில் பாதித்து அவர்களை மரணமடைய செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.