1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2020 (17:00 IST)

இன்றைய மோடி உரையில் இதுமட்டும் நிச்சயம் இருக்காது: ராகுல்காந்தி

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக தெரிவித்து இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி அறிவிக்கும் அறிவிப்பு என்னவாக இருக்கும் என ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று மாலை பிரதமரின் அறிவிப்பில் நிச்சயமாக சீன விவகாரம் இடம்பெற்றிருக்க  வாய்ப்பே இல்லை என்றும், சீனா குறித்து அவர் எதுவும் சொல்ல மாட்டார் என்றும், ஒரு நாட்டின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிப்பு இருந்தால் அதுபற்றி மௌனமாக இருக்கும் உலகின் ஒரே பிரதமர் மோடிதான் என்று அவர் கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி பேசுவார் என தெரிகிறது
 
மேலும் பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் எந்த ஒரு கொள்கை முடிவும் இன்றைய பிரதமரின் உரையில் இருக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்