இன்குபெட்டரில் குழந்தை; கவனிக்காத நர்ஸ்! – பதற செய்யும் வீடியோ!
பிரேசில் நாட்டில் இன்குபெட்டரில் வைக்கப்பட்ட குழந்தை கதவு சரியாக பூட்டப்படாததால் வெளியேறி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராபர்டா – ஜெசிகா தம்பதியினர் பிரேசில் நாட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குறை மாதத்திலேயே குழந்தை பிறந்துவிட்டதால் இன்குபெட்டரில் வைத்து பராமரித்திருக்கிறார்கள்.
இன்குபெட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தை கதவு சரியாக மூடாமல் இருந்ததால் காலால் தள்ளியபடி வெளியே வந்துவிட்டுருக்கிறது. இன்குபெட்டர் உயரமான இடத்தில் இருந்ததால் அதிலிருந்து குழந்தை தவறி கீழே விழுந்தது. இதனால் கை எலும்புகளில் முறிவு, உடலில் காயங்களும் ஏற்பட்டுள்ளன. குழந்தை கீழே விழுந்து கிடப்பதை கண்ட செவிலியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக முதலுதவி செய்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.
ஆனாலும் மருத்துவமனையின் பொறுப்பற்ற செயலாலேயே தனது குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டதாக பெற்றோர்கள் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கில் குழந்தை பாதுகாக்கப்பட்ட பகுதியின் வீடியோவை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த வீடியோவில் செவிலியர்கள் கதவை சரியாக பூட்டாதது பதிவாகியுள்ளதால் மருத்துவமனை நிர்வாகம் அந்த பெற்றோருக்கு நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.