1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (15:29 IST)

சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன் ? ராதாகிருஷ்ணன் விளக்கம் !

சமீபத்தில் திருச்சி நடுக்காட்டுப் பட்டியைச் சேர்ந்த  2 வயது சிறுவன் சுஜித், அருகே இருந்த போர்வெல் கிணற்றுக்குள் விழுந்தான். அவனை மீட்கும் முயற்சியில் அனைத்துத் தரப்பினரும் ஈடுபட்டனர்.  ஆனால் முயற்சி பலனின்றி சுஜித் உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன் என்பது குறித்து வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளிதுள்ளார்.
வருவாய்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம்  கூறியதாவது :
 
கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தின் போது,எரிந்த குழந்தைகளின் ச்டலங்களை காட்டியதற்க்காக விமர்சனங்களை எதிர்கொண்டோம்.அதன்பின் சடலங்களை வெளியே காட்டுவது குறித்து உரிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு மத்திய அரசு வகுத்துள்ளது. அதைத்தான் பின்பற்றி வருகிறோம்.
 
மேலும்,இந்த சடலம் என்னம் நிலையில் இருந்தது என்பது குறித்து பெற்றோரிடம்  கூறியிருக்கிறோம்.அதற்கு மேல் இந்த விசயத்தில் விளக்கம் அளிப்பது விதிமுறைகளுக்கு எதிரானதாக அமையும்.
 
சுஜித் மரணம் என்பது பேரிடர் இல்லை ஒரு விபத்து. மண்ணியல் நிபுணர் உடனிலிருந்து அவரது ஆலோசனையின் பேரில்தான்  இதனைச் செய்தொம்.

மேலும் மனிதனால் எடுக்கப்பட கூடிய அத்துணை முயற்சிகளையும் மேற்கொண்டோம்.தற்போது திறந்துள்ள ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளாக மாற்றப்பட வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.