2050 ல் உலக நாடுகள் பல கடலில் மூழ்கும் அபாயம்! அதிர்ச்சி தகவல்
நாளுக்குநாள் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருவதால் பல நாடுகளின் நகரங்கள் கடல் நீரால் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவியல் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலகளவில் புவி வெப்பமயமாதல் பல்வேறு இயற்கை மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பனிமலைகள் உருகுவதும், கடல்நீர் மட்டம் அதிகரிப்பதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் கடல் நீரால் கரையோர நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவியல் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
ராடார் மூலம் கணிக்கப்பட்ட ஆராய்ச்சி தகவல்களின்படி இந்தியாவில் 2050ல் 3 கோடியே 60 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் என கணித்துள்ளனர். இது உலகளவில் 25 கோடியாக இருக்கும் என கூறியிருக்கிறார்கள்.
கடந்த 20ம் நூற்றாண்டில் 15 செ.மீ வரை உயர்ந்த கடல் மட்டம் இந்த நூற்றாண்டின் இறுதியில் 2 மீட்டர் வரை உயரக்கூடும் என கணிக்கப்படுகிறது.