செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (08:55 IST)

உடலுறவில் ஆணுறை யூஸ் பண்ணலைனா குற்றம்! – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Condom
ஆண், பெண் உடலுறவில் ஈடுபடும்போது பெண்ணின் அனுமதியை மீறி ஆணுறையை பயன்படுத்தாமல் இருப்பது குற்றம் என கனடா உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆண், பெண் இடையேயான உடலுறவு குறித்த உலக அளவில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் கனடாவில் நடந்துள்ள வித்தியாசமான வழக்கு கவனத்தை ஈர்த்துள்ளது. கனடாவில் ஒரு ஆணும், பெண்ணும் ஆன்லைன் மூலமாக கடந்த 2017ல் பழகியுள்ளனர்.

பின்னர் நேரில் அவர்கள் சந்தித்துக் கொண்டபோது உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இருவர் சம்மதத்துடன் அது நடந்தாலும் ஆணுறை அணிய வேண்டும் என அந்த பெண் கேட்டுள்ளார். அதன்படி முதல் தடவை அந்த ஆண் ஆணுறையோடே உறவில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இரண்டாவது முறை ஆணுறை அணியாமலே பெண்ணை ஏமாற்றி உறவுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் கனடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெண் உறவுக்கு அனுமதியளிக்கும்போது அவர் ஆணுறை அணிய வேண்டும் என விரும்பினால் அதை ஆண் செய்ய வேண்டும். இல்லையென்றால் அது குற்றமாகவே கருதப்படும் என்று தீர்ப்பளித்துள்ளது.