1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2025 (10:34 IST)

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

Gold
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 45 ரூபாய் குறைந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை 20 ரூபாய் ஒரு கிராமுக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் என்று உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் தகவல்களை தற்போது பார்ப்போம்.
 
நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,025 என விற்பனையான நிலையில் இன்று ரூ.20 அதிகரித்து ரூ.8,045 என விற்பனையாகிறது. அதேபோல் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.64,200 என்ற விலையில் விற்பனையான நிலையில், இன்று 160 குறைஅதிகரித்து ந்து ரூ.64,360 என விற்பனையாகியுள்ளது.
 
அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.8,776 என்றும், எட்டு கிராம் ரூ.70,208 என்றும் விற்பனையாகி வருகிறது.
 
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.109 என விற்பனையான நிலையில், இன்று ஒரு ரூபாய் குறைந்து ரூ.180 என்ற விலையிலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.109,000 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
 
தங்கம் விலை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்த நேரத்தில் முதலீட்டுக்கு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என பொருளாதார ஆலோசகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran