வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (17:40 IST)

13 லட்சம் மரககன்றுகள் நட்ட இளைஞர்...

canada young man
உலகில் வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில், ஒரு இளைஞர் தனியாக 13 லட்சம் மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார்.

உலகில் சமீபகாலமாக வெப்ப நிலை அதிகரித்துள்ளத், அண்டார்டிக்கில் பனிப்பாறையில் கணிசமாக உருகிவருவதால் கடல் மட்டம் உயரும் அபாயமுள்ளது.

அதேசமயம் உலகிலுள்ள காடுகள், மரங்கள் எல்லாம் மக்களுக்காகவும் நிறுவனங்களின் தேவைக்காகவும் மரங்கள் அழிக்கப்பட்டு, வனங்கள் வர்த்தக நிலங்களாகி வருகிறது.

இந்த நிலையில், கனடா முழுவதும் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் தனியாக நட்டு சாதனை படைத்துள்ளார்.

கனடா நாட்டிலுள்ள கியூபெக்கைச் சேர்ந்த இளைஞர் ஆண்டோபின் முதலில் பொழுபோக்கிற்காக மரக்கன்றுகள் நட்டபின், அதுவே தனக்குப் பிடித்துப்போய், தற்போது லட்சக்கணக்கில் நட்டுள்ளார். இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது