1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2025 (09:28 IST)

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

railway
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படுவதாக நேற்று ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், அவ்வாறு பெட்டிகள் குறைக்கப்படவில்லை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
 
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை. விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பயனடையும் வகையில், பிப்ரவரி மாதம் முதல் பொது பேட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
 மகா கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, தற்போது ஒதுக்கப்பட்ட பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, பிப்ரவரி 26 ஆம் தேதி மகா கும்பமேளா நிகழ்வு முடிவடைந்த உடன், மார்ச் மாதம் முதல் இந்த பெட்டிகள் தெற்கு ரயில்வே சார்பில் மீண்டும் இணைக்கப்படும்.
 
மேலும், 14 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம், 14 ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பேட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran