1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2018 (15:04 IST)

பெண்களின் உள்ளாடையை திருடும் புத்த துறவி: வைரல் வீடியோ!

தாய்லாந்தை சேர்ந்த புத்த துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
தாய்லாந்த் Suphaburi பகுதியில் வசித்து வருபவரின் வீட்டில் பெண்களின் உள்ளாடைகள் தொடர் காணாமல் போனது. இதனால் இதனை திருவது யார் என்பதை கண்டுபிடிக்க துணிகளை காயப்போடும் இடத்தில் சிசிடிவி பொருத்தப்பட்டது. 
 
பதிவான சிசிடிவி காட்சியில் புத்த துறவி ஒருவர் உள்ளாடைகளை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த துறவியின் பெயரை கண்டுபிடித்து அவருடன் இருக்கும் துறவிகளிடன் இதை பற்றி கேட்டுள்ளனர். 
 
அப்போது அவருக்கு உடல் மற்றும் மனதளவில் பிரச்சனைகள் இருப்பதாகவும் இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும், தற்போது அதை நிறுத்திவிட்டதால் இதுபோன்ற வித்தியசமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.