66 கோடி டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின் திருட்டு: ஜப்பானில் அதிர்ச்சி சம்பவம்
தற்போது உலகில் பிட்காயின் குறித்த ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் புதியதாக பிட்காயின் வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹேக்கர்களால் எளிதில் பிட்காயினை திருடி விற்கும் சம்பவம் ஒன்று ஜப்பானில் ஏற்பட்டுள்ளதை அடுத்து பிட்காயின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது
ஜப்பான் நாட்டில் காயின்செக் என்ற நிறுவனம் பொதுமக்களுக்கு பிட்காயின்களை வாங்கி தருகிறது. இந்த நிறுவனத்தின் இணையதளத்திற்குள் புகுந்த ஹேக்கர்கள் 66 கோடி டாலர்கள் மதிப்புள்ள பிட்காயினை திருடிவிட்டதாக அறியப்படுகிறது. இதனால் அந்த நிறுவனமே மேலும் இயங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இருப்பினும் பிட்காயின் திருட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மாற்று பிட்காயின்கள் தரப்படும் என்று காயின்செக் தலைமை அதிகாரி யுசுக்கே தெரிவித்துள்ளார். இதனால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தாலும் சைபர் தாக்குதலால் தங்களது பிட்காயினுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் உள்ளனர்.