செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (16:23 IST)

முதல்வர் நிவாரண நிதிக்கு … ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் ஆளுநர் !

முதல்வர் நிவாரண நிதிக்கு … ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது   ஒரு மாத சம்பளத்தை கொரோனா பாதிப்புக்கான முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

ந்தியாவை பொருத்த வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 700- கடந்துள்ளது.

தமிழகத்தில், மதுரையில் ஏற்கனவே கொரோனா தொற்று இருந்தவரின் குடும்பத்தில் மேலும் இருவருக்கும், ஈரோடு மற்றும் சென்னையில் தலா இருவரும் என 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.  

எனவே, தமிழகத்தில் முதல்வர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மற்றும் பாதிக்காப்பு ஏற்பாடுகளை மக்களுக்காக எடுத்து வருகிறார்.

இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது   ஒரு மாத சம்பளத்தை கொரோனா பாதிப்புக்கான முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.