1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. WATCH Virtual reality shows what coronavirus does to your lungs

கொரோனா தாக்கிய மனிதரின் நுரையீரல் பார்க்க எப்படி இருக்கும்? வீடியோ உள்ளே!!

சீனா
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரல் பார்க்க எப்படி இருக்கும் என வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
 
சீனாவின் உருவெடுத்த கொரோனா வைரஸ் தற்போது 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 23,976 பேர் உயிரிழந்தும் உள்ளனர். 
 
ஒருவர் கொரோனாவால் பாதிகப்பட்டிருந்தால் முதலில் அவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொரோனா வைரஸ் சீர்குலைக்கிறது. மேலும், நுரையீரலை வைரஸ் கடுமையாக சேதப்படுத்துகிறது. நோயாளி இறந்த பின்னரும் நோயாளியின் நுரையீரலில் உயிருடன் இந்த வைரஸ் இருக்கிறது என சீன டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் தற்போது, வாஷிங்டன் டி.சி மருத்துவமனை கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவரின் நுரையீரல் பாதிப்படைந்து பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என 3டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ...
 
 
அடுத்த கட்டுரையில்
கொரோனா வைரஸ்: பலத்த அடிவாங்கிய அமெரிக்க பொருளாதாரம்