வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 7 ஜூன் 2023 (21:07 IST)

ஹிட்லர் மீசை வரைந்த சிறுவனுக்கு சிறை... அதிர்ச்சி சம்பவம்

Turkish President Erdogan
துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

துருக்கி நாட்டில் அதிபர் தயிப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் இவர் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தென்கிழக்கு   நகரமான மெர்சினைச் சேர்ந்த 16 வயது  சிறுவன் தன் வீட்டின் அருகில் ஒப்பட்டப்பட்டிருந்த எர்டோகனின் புகைப்படம் இருந்த சுவரொட்டியில் அவரது படத்திற்கு ஹிட்லர் மீசை வரைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த  நிலையில் ஹிட்லர் மீசை வரைந்து  அவரை அவமதிக்கும் விதமான வாசகங்களை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சிறுவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.