வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 மே 2023 (23:09 IST)

துருக்கியில் அதிபர் தேர்தலின் 2 வது சுற்று எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

turkey
துருக்கி நாட்டில் வரும் 28 ஆம் தேதி  அதிபர் தேர்தலின் 2 வது சுற்று நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

துருக்கி நாட்டில் சமீபத்தில் அதிபர் மற்றும் பாராளுமன்றாத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் எர்டோகன் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி தரப்பில் கெமால் கிலிக்டரோக்லு ஆகியோர் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில்,  91 சதவீதம் அளவு வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்,  இத்தேர்தலில் வெற்றி பெற  வேட்பாளர் 50சதவீதம் வரை வாக்குகள் பெற வேண்டும்.

ஆனால், தற்போதைய அதிபர் எட்டோகன் 49.50சதவீதம் மட்டுமே வாக்குகள் பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட கெமால் கிலிக்டரோக்லு 44.79 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார்.

இதனால், இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், வரும் 28 ஆம் தேதி  அதிபர் தேர்தலின் 2 வது சுற்று நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.