ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 3 ஜூன் 2023 (14:08 IST)

எனக்குப் பிடித்த பெண் சமந்தா- பிரபல நடிகர்

Vijay Deverakonda
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர், விண்ணைத்தாண்டி வருவாயா, கத்தி, அஞ்சான்,  தங்கமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான யசோதா  படம் நல்ல வரவேற்பை பெற்றது. சாகுந்தலம் என்ற படம் கலவையாக விமர்சனங்களைப் பெற்றது.  கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில் தற்போது, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவின் குஷி படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வரும் நிலையில், இருவரும் நெருக்கமாகப் பழகி வருவதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.

இந்த நிலையில், குஷி பட ஷீட்டிங்கிற்காக துருக்கி சென்ற நிலையில், ஓட்டல் ஒன்றில் விஜய் தேவரகொண்டாவுடன் உணவு சாப்பிடும் புகைப்படத்தை சமந்தா தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

இதுகுறித்து விஜய் தேவரகொண்டாவின்  வளர்ச்சி பற்றி  ஒரு பதிவிட்டு,  நண்பர்கள் நம்முடனே இருப்பார் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு விஜய் தேவரகொண்டா, ‘’எனக்குப் பிடித்த பெண் சமந்தா’’ என்று கூறி இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிற்து.